நேர்காணலில் 194 பேர் பங்கேற்பு

நேர்காணலில் 194 பேர் பங்கேற்பு

Update: 2021-07-19 13:22 GMT
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்காக, தற்காலிகமாக 6 மாதங்களுக்கு மட்டும் பணியாளர்கள் பணியமர்த்தப்பட, ரேடியோகிராபர் 5 பேர், டயாலிசிஸ் டெக்னீசியன் 10 பேர், இ.சி.ஜி.டெக்னீசியன் 5 பேர், சி.டி.ஸ்கேன் டெக்னீசியன் 5 பேர், அனதீசியா டெக்னீசியன் 15 பேர், பார்மசிஸ்ட் 5 பேர், மருத்துவமனை தொழிலாளர்கள் 6 பேர் ஆகிய பதவியிடங்களுக்கான நேர்காணல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படும். இதுபோல் லேப் டெக்னீசியன் 5 பேருக்கு மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.
மருத்துவக்கல்லூரிக்கு 56 இடங்களுக்கு 90 பேர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுனர், ஆய்வக நுட்புனர் மற்றும் நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் கொரோனா கட்டுப்பாட்டு பணிகளுக்கு தற்காலிகமாக மாதம் ரூ.12 ஆயிரம் வீதம், 6 மாதங்களுக்கு மட்டும் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அதன்படி மருந்தாளுனர் 11 பேரும், ஆய்வக நுட்புனர் 11 பேரும், நுண்கதிர் படப்பிடிப்பாளர்கள் 11 பேருக்கு நேர்காணல் நடந்தது. 33 இடங்களுக்கு 104 பேர் பங்கேற்றனர். இதில், திருப்பூர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பாக்கியலட்சுமி, மருத்துவக் கல்லூரி டீன் முருகேசன், மருத்துவமனைக்கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் நேர்காணலில் பங்கேற்றவர்களின் திறன்களை மதிப்பிட்டனர்.


மேலும் செய்திகள்