திருப்பூர்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது.
இதில் ஒட்டுமொத்தமாக 173 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநகராட்சி பணியாளர்கள் ஒவ்வொருவராக வரிசையில் சென்று தடுப்பூசி செலுத்தும்படி அறிவுறுத்தினர். இதனை டாக்டர் கலைச்செல்வன் ஆய்வு செய்தார்.