சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்- இன்று நடக்கிறது
சேலம் மாவட்டத்தில் 138 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் மையங்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மருந்து இருப்பு இல்லாததால் தடுப்பூசி முகாம் நடைபெறவில்லை.
இந்தநிலையில் சென்னையில் இருந்து சேலத்திற்கு 13 ஆயிரத்து 500 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள 138 மையங்களில் பொதுமக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.