லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது

Update: 2021-07-18 19:12 GMT
கொட்டாம்பட்டி
தமிழக அரசால் லாட்டரி சீட்டு விற்பனை தடைசெய்யபட்ட நிலையில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் கொட்டாம்பட்டி பகுதிகளில் அதிகமாக விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி பகுதிகளில் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசாருடன் கிரைம் போலீசாரும் இணைந்து பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கருங்காலக்குடியில் நடத்திய சோதனையில் தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த 3 பேரை பிடித்தனர். அவர்களிடமிருந்து 45 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்தனர். விசாரனையில் திருச்சுனையை சேர்ந்த பொன்னையா, அய்யாபட்டியை சேர்ந்த சங்கரலிங்கம், அலங்கம்பட்டியை சேர்ந்த அறிவழகன் என்பது தெரியவந்தது மேலும் அவர்களிடமிருந்து ரூ. 12 ஆயிரம் பணம் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பொன்னையா, சங்கரலிங்கம், அறிவழகன் ஆகியோரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்