எருமப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
எருமப்பட்டி அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
எருமப்பட்டி,
எருமப்பட்டி அருகே உள்ள காவக்காரன்பட்டி ஊராட்சி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் காந்தி. இவருடைய மகன் மணிகண்டன் (வயது 30). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கவுசல்யா என்பவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது.
மணிகண்டனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லையாம்.
விசாரணை
இந்தநிலையில் சம்பவத்தன்றும் மணிகண்டனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந் அவர் தனது மாமியார் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாமியார் ராணி, மனைவி கவுசல்யா ஆகியோர் மணிகண்டனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.