காரைக்குடி கல்லூரி சாலையில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காரைக்குடி வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையொட்டி அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (வயது 35) என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.அதன்பேரில் போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.