ஆவடியில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு: மாணவ-மாணவிகளுக்கு கையடக்க கணினி வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதி அலுவலக திறப்பு விழா மற்றும் இணைய வழி கல்வி கற்க பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ மாணவிகளுக்கு கையடக்ககணினி(டேப்) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-07-18 11:33 GMT
இந்த நிகழ்ச்சிக்கு தமிழக பால்வளத் துறை அமைச்சரும், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும் தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான நாசர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ஆவடி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் அவர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இணையவழிக் கல்வி கற்க ஏதுவாக 120 (கையடக்க கணினி)டேப்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பூபதி, மாநில மாணவர் அணி இணை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட துணை செயலாளர்கள் ரமேஷ், காயத்ரி ஸ்ரீதரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜி, திருமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜேந்திரன், பேபி சேகர், நாராயண பிரசாத், மூர்த்தி, தேசிங்கு, பூவை ஜெயக்குமார், ஜெயசீலன், புஜ்ஜி ராமகிருஷ்ணன், பூவை ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

முன்னதாக ஆவடிக்கு வருகை புரிந்த உதயநிதி ஸ்டாலினுக்கு வழிநெடுகிலும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் செய்திகள்