காஞ்சீபுரம் நகரில் கொரோனா விதிகளை மீறிய 12 வணிக நிறுவனங்களுக்கு அபராதம் நகராட்சி ஆணையர் நடவடிக்கை

காஞ்சீபுரம் நகரில் கொரோனா விதிகளை மீறிய 12 வணிக நிறுவனங்களுக்கு நகராட்சி ஆணையர் லட்சுமி அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டார்.

Update: 2021-07-18 06:08 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் நகரில் கொரோனா பரவலை கட்டுபடுத்த அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் முறையாக பின்பற்றுகிறதா என காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் லட்சுமி ஆய்வு மேற்கொண்டார்.

இதில் 12 வணிக நிறுவனங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்துதல், அதிக அளவு வாடிக்கையாளர்களை அனுமதித்தல், முககவசம் அணியாதிருத்தல் என ரூ. 8 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டது.

அதேபோல் காஞ்சீபுரம் நகரில் முககவசம் அணியாமல் சென்ற 60 நபர்கள், வியாபாரிகள் என்று அபராதமாக ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் தொடர்ச்சியாக விதிமீறிலில் ஈடுபட்டால் கடைகளுக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் லட்சுமி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்