பெண் விஷம் குடித்து தற்கொலை

கல்லிடைக்குறிச்சியில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-17 20:47 GMT
அம்பை:
கல்லிடைக்குறிச்சி கோல்டன் நகரைச் சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி வெண்ணிலா (வயது 34). இவர்களுக்கு குழந்தை இல்லை. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வெண்ணிலா தனியாக வாழ்ந்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ரமேஷ் மனைவி சந்தியா வீட்டில் வேலை செய்து, அங்கேயே தங்கியிருந்தார்.

இந்த நிலையில் சந்தியா உடல்நலக்குறைவால் கடந்த 13-ந்தேதி இறந்தார். இதனால் மனமுடைந்த வெண்ணிலா நேற்று முன்தினம் வீட்டில் சாணி பவுடரை (விஷம்) தண்ணீரில் கலந்து குடித்து மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார். உடனே அவரை  சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்