200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
200 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
உசிலம்பட்டி
உசிலம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன்கடைகளில் சோதனை நடத்தி 200 கிலோ கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.
திடீர் சோதனை
மதுரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் மீன் மார்க்கெட்டுகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்து கெட்டுப்போன, ரசாயனம் தடவிய மீன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். இதேபோல் பல்வேறு இடங்களில் உள்ள மார்க்கெட்டுகள், மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் விற்பனைக்கு இருப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்தநிலையில் உசிலம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மீன்கடைகள், இறைச்சி கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
மீன்கள் பறிமுதல்
சுமார் 100-க்கும் அதிகமான இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சோதனை நடந்தது. உணவு பாதுகாப்புத்துறை வட்டார அலுவலர் லிங்கம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது சில கடைகளில் கெட்டுப்போன மீன் மற்றும் பழைய இறைச்சிகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 200 கிலோ மீன் மற்றும் இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் ரசாயனம் கலந்த மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில்நேற்று உசிலம்பட்டி பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு கெட்டுப்போன மீன்களை பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.