போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூருக்கு சென்று வந்தவர் திருச்சியில் கைது
போலி பாஸ்போர்ட்டில் சிங்கப்பூருக்கு சென்று வந்தவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டு,
சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் காலை 9 மணிக்கு திருச்சிக்கு வந்தது. அப்போது, அந்த விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் இளையாத்தங்குடியை சேர்ந்த அழகப்பன்(வயது 51) போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்று சிங்கப்பூர் சென்று வந்தது ெதரியவந்தது. இதைத்தொடர் அவரை திருச்சி ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர்.