விவசாயிகள்-விவசாய ெதாழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-07-17 18:10 GMT
வேளாங்கண்ணி:
மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து விவசாயிகள்-விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். 
இதில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் கோவை சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் முருகையன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் உமாநாத், பொருளாளர் தெட்சிணாமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன், விவசாய சங்க மாவட்டகுழு உறுப்பினர்கள் ரவி, சுலைமான் சேட், மாற்றுத்திறனாளி சங்கம் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் விவசாய சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்த்தவர்கள் கலந்து கொண்டனர்.
மேகதாதுவில் சட்டவிரோதமாக அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், இதற்கு துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 திருமருகல்
திருமருகல் பஸ்நிலையம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின்பாபு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாய்மேடு
 வாய்மேட்டை அடுத்த தாணிக்கோட்டகம் கடைத்தெருவில் தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் அம்பிகாபதி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வெற்றியழகன், ஒன்றிய தலைவர் இளையபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கீழ்வேளூர்
தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கீழ்வேளூர்- கச்சனம் சாலை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு. விவசாய சங்க ஒன்றிய செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அபுபக்கர், விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் மீரா, ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர் சந்திரசேகரன், துணை தலைவர் சுந்தரமூர்த்தி, விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர்கள் பாண்டியன், முருகையன் மற்றும் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
சிக்கல்
 இதேபோல் சிக்கல் கடைவீதியில் நாகை விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வடிவேல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  இதில் விவசாய தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் பகு. விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்