பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம்
பந்தலூர் பகுதியில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைக்காரர்களுக்கு ரூ.13 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
பந்தலூர்
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பந்தலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சேரம்பாடி, எருமாடு, தாளுர், அய்யன்கொல்லி, நம்பியார்குன்னு, கொளப்பள்ளி உள்பட பல பகுதிகளில் கூடலூர் ஆர்.டி.ஓ. சரவணகண்ணன் மேற்பார்வையில் தாசில்தார் குப்புராஜ், துணை தாசில்தார்கள் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மளிகை, இறைச்சி, டீ கடைகளில் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறா என்று ஆய்வு செய்தனர். இதில் மொத்தம் 6½ கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பயன்படுத்தி கடைக்காரர்களிடம் இருந்து அபராதமாக மொத்தம் ரூ.12 ஆயிரத்து 900 வசூலிக்கப்பட்டது.
மேலும் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது.