குளித்தலை
குளித்தலை சண்முகா நகர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த குளித்தலை பிள்ளைத்தோப்பு பகுதியை சேர்ந்த கார்த்தி (வயது 29) என்பவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 250 கிராம் கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.