கரூரில் வாழைத்தார் ஏலம்

கரூரில் வாழைத்தார் ஏலம் அமோகமாக நடந்தது. இதில், கற்பூரவள்ளி ஒரு தார் ரூ.500-க்கு விற்பனையானது.

Update: 2021-07-17 17:19 GMT
கரூர்
வாழை மண்டி
கரூர் ரெயில் நிலையம் அருகே வாழை மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாலாபேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல், நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் புவன், ரஸ்தாளி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் மற்றும் ஈரோடு மாவட்டம் கோபி மற்றும் வேலூர், தேனி, போடி ஆகிய பகுதிகளில் இருந்து செவ்வாழை பழங்கள், மோரிஸ் பழவகைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்படுகின்றன.  இதனை கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் வியாபாரிகள் ஏலம் எடுத்து வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவில் 2-ம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனாவின் பாதிப்பு குறைய தொடங்கியதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
வாழைத்தார் ஏலம்
இதனையடுத்து கரூர் வாழை மண்டி செயல்பட தொடங்கியதையடுத்து, வாழைத்தார்கள் ஏலம் நடைபெற்றது. இதில் வியாபாரிகள் தங்களுக்கு தேவையான வாழைத்தார்களை வாங்கி சென்றனர். 
இதில் கற்பூரவள்ளி ஒரு தார் ரூ.500-க்கும், ரஸ்தாளி ரூ.400-க்கும், பச்சநாடான் ரூ.300-க்கும், பூவன் ரூ.350-க்கும், செவ்வாழை ஒரு பழம் ரூ.6 முதல் ரூ.8 வரைக்கும் ஏலம் போனது. ஊரடங்கால் வாழைத்தார் விற்பனை மிகவும் குறைந்ததாகவும், தற்போது விற்பனை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்