கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 வயது ஆண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 33 வயது ஆண் உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.

Update: 2021-07-17 16:58 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி பகுதியை சேர்ந்த 33 வயது ஆண் கொரோனா பாதிப்புடன் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். அதே போல 67 வயது முதியவர் கொரோனா பாதிப்புடன் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 40 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 40 ஆயிரத்து 80 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 557 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 316 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்