87 மையங்களில் 28500 பேருக்கு தடுப்பூசி
87 மையங்களில் 28500 பேருக்கு தடுப்பூசி
கோவை
கோவையில் 4 நாட்களுக்கு பிறகு 87 மையங்களில் 28 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தடுப்பூசி செலுத்த ஆர்வம்
கொரோனா 3-வது அலை வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. எனவே தடுப்பூசி செலுத்திக் கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில், கோவை மாநகரம் மற்றும் ஊரக பகுதிகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ள மையங்கள் முன்பு மக்கள் நள்ளிரவு முதல் காத்திருக்கும் நிலை இருந்தது.
இதை தவிர்க்க தடுப்பூசி எண்ணிக்கை மற்றும் மையங்கள் பற்றிய விவரம் தினந்தோறும் காலை 8 மணிக்கு அறிவிக்கப்படும். 10 மணிக்கு டோக்கன் வழங்கப்பட்டு, 11 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் கலெக்டர் சமீரன் அறிவித்தார்.
4 நாட்களுக்கு பிறகு
கையிருப்பு இல்லாததால் கடந்த 4 நாட்களாக கோவை மாநகரில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில்சென்னையில் இருந்து கோவைக்கு 28 ஆயிரம் கோவிஷீல்டு, 8 ஆயிரம் கோவாக்சின் என மொத்தம் 36 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டன.
இதனால் நேற்று முதல் மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங் கின. கோவை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் மொத்தம் 87 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.
இதில், கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முகாமில் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சில மையங்களில் டோக்கன் கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றத் துடன் திரும்பிச் சென்றனர்.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி செந்தில்குமார் கூறியதாவது
28,500 பேருக்கு தடுப்பூசி
கோவை மாநகராட்சியில் 30 இடங்களில் கோவிஷீல்டு, 10 இடங்களில் கோவேக்சின் என 40 மையங்களில் தலா 350 தடுப்பூசி வீதம் 14 ஆயிரம் பேருக்கும், ஊரகப்பகுதியில் 47 மையங்களில் தலா 250 வீதம் 11,750 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதில், ஊரகப்பகுதிகளில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்பட வில்லை.
மேலும் பீளமேடு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், சர்தார் வல்லபாய் பட்டேல் ஜவுளி கல்லூரி, மாவட்ட தொழில் மையம், வன மரபியல் நிறுவனம், ரெயில்வே, சிறைச்சாலை
மற்றும் விமானப்படை ஊழியர்கள், வணிகர் சங்கம், மாநகராட்சி ஒப்பந்ததாரர் சங்கம் உள்பட 12 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது. இங்கு 2,750 பேருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கோவை மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 28 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி போடப்பட் டது. இதன் மூலம் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.