காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்த காங்கிரசார் மீது வழக்கு
நெல்லையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஊர்வலமாக வந்த காங்கிரசார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நெல்லை:
காமராஜர் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் காங்கிரசார் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்தனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் பகுதியில் காங்கிரசார் வந்தபோது, போலீசாரின் அறிவுறுத்தலின்பேரில், மேளதாளமின்றி காங்கிரசார் அமைதியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் அனுமதியின்றி ஊர்வலமாக வந்ததாக கூறி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் உள்பட சிலர் மீது நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.