மூதாட்டி மீது தாக்குதல்; தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்கு

மூதாட்டியை தாக்கியது தொடர்பாக தம்பதி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2021-07-16 19:10 GMT
தா.பழூர்,

அரியலூர் மாவட்டம் தா.பழூர் தோப்புத்தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி(வயது 60). இவருடைய வீட்டில் இருந்து பயன்படுத்திய தண்ணீர் அருகில் இருக்கும் பாண்டியன் என்பவரது வீட்டின் வாசற்படி வழியாக ஓடியதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ஜெயலட்சுமியிடம் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமியின் மகன்கள் பாண்டியன்(34), ரஞ்சித் (24), செல்வத்தின் மகன் பாண்டியன் (30), பாண்டியனின் மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த கட்டையை எடுத்து தாக்கியதில் ஜெயலட்சுமிக்கு தலையிலும், காலிலும் காயம் ஏற்பட்டது. 

இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஜெயலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் 4 பேர் மீது தா.பழூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்