செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
நொய்யல்
புன்னம் சத்திரம் அருகே புள்ளையாம் பாளையத்தில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து முதல் காலபூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் செல்வ விநாயகர் கோவில் கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பரிவார தெய்வங்களான காளியம்மன், நவலடி பெரியசமி, கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், கரூர் மேற்கு ஒன்றிய கழக பொருளாளர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.