தொடர் மழை காரணமாக முதுமலையில் தடுப்பணைகள் குளங்கள் நிரம்பின
தொடர் மழை காரணமாக முதுமலையில் தடுப்பணைகள், குளங் கள் நிரம்பின. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி உள்ளது.
கூடலூர்
தொடர் மழை காரணமாக முதுமலையில் தடுப்பணைகள், குளங் கள் நிரம்பின. இதனால் வனவிலங்குகளுக்கு பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை நீங்கி உள்ளது.
புலிகள் காப்பகம்
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இங்கு காட்டு யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட ஏராளமான வனவிலங்கு கள் உள்ளன.
வறட்சி காலத்தில் காட்டு யானை, காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. மேலும் பசுந்தீவனம், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக வேறு பகுதிக்கு வனவிலங்குகள் இடம் பெயர்ந்தன.
தடுப்பணைகள் நிரம்பின
இந்த நிலையில் கூடலூர், முதுமலை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதி பசுமையாக காட்சியளிக்கிறது.
இதேபோல் முதுமலை புலிகள் காப்பக வனத்தில் உள்ள ஹோம் பட்டா உள்பட பல இடங்களில் குளங்கள் மற்றும் தடுப்பணை கள் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் இல்லாமல் இடம் பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் முதுமலைக்கு திரும்பி உள்ளன.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-
நடமாட்டம் அதிகம்
முதுமலையில் தொடர் மழையால் குளங்கள் தடுப்பணைகள் நிரம்பியுள்ளது. இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் பசுந்தீவனங்கள் மற்றும் தண்ணீர் தட்டுப்பாடின்றி காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு கிடைக்கிறது.
இருப்பினும் கொரோனா ஊரடங்கு என்பதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியாமல் உள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்பதால் வன விலங்குகளின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.