4½ பவுன் நகை திருட்டு

பஸ்சில் வந்த பெண்ணிடம் 4½ பவுன் நகை திருட்டு நடந்துள்ளது.

Update: 2021-07-16 17:26 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள முத்துவயல் பகுதியை சேர்ந்தவர் நாகசாமி என்பவரின் மனைவி சண்முகம் (வயது65).இவர் நேற்று முன்தினம் அரசு பஸ்சில் ராமநாத புரத்திற்கு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். சத்திரக்குடியில் ஏறி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி அருகில் வந்து இறங்கி அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றுள்ளார். அப்போது தற்செயலாக தான் அணிந்திருந்த 4½ பவுன் தங்க சங்கிலியை பார்த்தபோது காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் திருடிச்சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த  புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்