240 மதுபாட்டில்கள் திருட்டு
டாஸ்மாக் கடையில் 240 மதுபாட்டில்கள் திருடப்பட்டு உள்ளது.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே எட்டுச்சேரி கிராம மெயின் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இங்கு கடை விற்பனை யாளர்களாக கதிர்வேல், தனபால், முருகேசன் ஆகியோர் வேலைபார்த்து வருகிறார்கள். இருளாண்டி மேற்பார்வை யாளராக இருந்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விற்பனையை முடித்துவிட்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வந்து சிறிய கடப்பாரை மற்றும் உளி மூலம் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மதுபான பெட்டிகளை திருடி சென்றுவிட்டனர். நேற்று கடையை திறக்க வந்த விற்பனையாளர்கள் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் 240 மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. கடையின் மேற்பார் வையாளர் இருளாண்டி அளித்த புகாரின்பேரில் பேரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.