குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது
தூத்துக்குடியில் குண்டர் சட்டத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் அருகே மாதாநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி என்ற பொன்பாண்டி. இவரை கடந்த மாதம் 18-ந் தேதியன்று ஒரு கும்பல் கொலை செய்ய முயன்றது. இதுதொடர்பாக சதீஷ்குமார் (வயது 41) ஜோதிராஜா (35), மதன் (21) ஜெரீன் (23) மற்றும் நெல்லை கோபாலசமுத்திரத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் சதீஷ்குமார், ஜோதிராஜா, மதன், ஜெரீன் ஆகியோர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அலெக்ஸ்பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், கலெக்டர் செந்தில்ராஜிடம் பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் அலெக்ஸ் பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான உத்தரவை கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார். இதையடுத்து தாளமுத்துநகர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, அலெக்ஸ்பாண்டியனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தார்.