தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக அனிதா பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக அனிதா பொறுப்பேற்று கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த ராமமூர்த்தி வேலூர் மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது மேலாளராக இருந்த அனிதா தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில் அவர் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.