பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின் போது இறந்த போலீசாரின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

Update: 2021-07-16 17:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கடந்த ஆண்டு கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதே போன்று தூத்துக்குடி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றி வந்த முதல் நிலை காவலர் ராஜேஸ்வரனும் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவர்கள் இருவரும் பணியில் இருக்கும்போது மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்தாருக்கு தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் ரூ.3 லட்சத்திற்கான காசோலையை, பணியின் போது இறந்த சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரனின் மனைவி வெங்கடேஷ்வரியிடமும், அதுபோல் முதல் நிலை காவலர் ராஜேஸ்வரனின் தந்தை சுடலைமணியிடமும் வழங்கினார். பின்னர் அவர்களிடம் கருணை அடிப்படையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் காவல்துறை அலுவலக நிர்வாக அதிகாரி சங்கரன், உதவியாளர் ரமேஷ், மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்