‘ராங்க்கால்’ மூலம் பெண்ணை காதலித்து திருமணத்துக்கு மறுத்த ராணுவ வீரர் கைது

ராங்க்கால் அழைப்பால் உருவான காதல் 10 ஆண்டாக நீடித்த நிலையில் பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-16 16:53 GMT
ஆரணி

ராணுவவீரர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சிறுமூர் கிராமத்ைத சேர்ந்தவர் சிவா (வயது 31). ராணுவ வீரரான இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவரது செல்போனில் பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். வேறு யாரையோ தொடர்பு கொள்ள முயன்றபோது ராங்க்கால் ஆகி சிவாவுக்கு போன் வந்து விட்டது.
அந்த ராங்க்கால் அழைப்பில் பேசிய பெண்ணே இவரது காதல் வலையில் விழுந்து விட்டார்.  இருவரும் நேரடியாக சந்தித்துக்கொண்ட நிலையில் இவர்கள் கடந்த 10 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
ஆசைவார்த்தை

அந்த பெண்ணை திருமணம் செய்வதாக சிவா ஆசை வார்த்தைகளைக் கூறி வந்துள்ளார். தற்போது சிவா ராஜஸ்தானில் உள்ள ராணுவ முகாமில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிவாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் மறுத்து விட்டார்.  இதனால் ஏமாற்றம் அடைந்த அந்த பெண் அது குறித்து கடந்த மே 31-ந் தேதி ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

சிவா ராணுவ முகாமில் பணியாற்றி வருவதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யாமல் புகார் குறித்து ராஜஸ்தான் ராணுவ முகாமிற்கு தெரிவித்து நேரடியாக விசாரணை நடத்த வேண்டும் என மகளிர் போலீசார்  அனுமதி  கோரினர். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுமூர் கிராமத்திற்கு சிவா வந்துள்ளதாக பெண்ணின் உறவினர்களுக்கு தெரிய வரவே அவர்கள் ஆரணி அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் அனுப்பினர்.

கைது

உடனடியாக ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன் தலைமையில் ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் ராணுவ வீரர் சிவாவை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து  புகார் குறித்து விசாரணை நடத்தினர்.
 விசாரணையில் திருமணத்திற்கு சிவா மறுப்பு தெரிவித்தது உறுதியானது. அதன்பேரில் சிவாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அத்துடன் இருவரையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

மேலும் செய்திகள்