குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை

குன்றத்தூர் அருகே முதியவர் தீக்குளித்து தற்கொலை.

Update: 2021-07-16 16:04 GMT
பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம் ரஹ்மானியா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரம்மயா (வயது 62). நேற்று வீட்டின் எதிரே உள்ள முட்புதரில் உடல் தீ வைத்து எரிந்த நிலையில் பிணமாக கிடப்பதாக வந்த தகவலையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்து கிடந்த பிரம்மயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிரம்மயா மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபடுவார் என்பதும் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்து கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்தவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்