செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் பேசுவதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-07-16 05:42 GMT
பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் முருகேசன். அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 3 மகள்கள். அதில் 2-வது மகளான சுவேதா (வயது 19), கொத்தவால் சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

சுவேதா வீட்டில் தனியாக அடிக்கடி செல்போனில் யாருடனோ பேசி வந்ததாக தெரிகிறது. இதனால் அவரை பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் விரக்தி அடைந்த சுவேதா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார், தூக்கில் தொங்கிய மாணவி சுவேதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்