போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தவர் திருச்சியில் கைது
போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று வந்தவரை ஏா்போா்ட் போலீசார் கைது செய்தனர்.
செம்பட்டு,
மலேசியாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டம், தலைவாசல், சோழவந்தான் தெருவை சேர்ந்த நைனார் முகமது (வயது 36) என்ற பயணி போலியான பெயரில் பாஸ்போர்ட் பெற்று மலேசியா சென்று அங்கு புரோட்டா மாஸ்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ஏா்போா்ட் போலீசார் அவரை கைது செய்தனர்.