வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-07-15 22:18 GMT
நெல்லை:
நெல்லை டவுன் காவல்பிறை தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் மணிகண்டன் (வயது 34). தொழிலாளியான இவர் டவுன் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். இவர் நேற்று மாலை தனது வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையை அடுத்த கீழ தென்கலத்தை சேர்ந்தவர் சோனமுத்து (44). இவர் திருமால்நகரில் உள்ள ஒரு கடையில் துணி தேய்க்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சோனமுத்து மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்