போலி டீ தூள் தயாரித்தவர் கைது

போலி டீ தூள் தயாரித்தவர் கைது

Update: 2021-07-15 21:18 GMT
மதுரை
மதுரை தெப்பக்குளம் பகுதியில் போலி டீ தூள் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மதுரை வீரன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது புதுராமநாதபுரம் ரோடு தமிழன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் போலி டீ தூள் தயாரிக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு பிரபல கம்பெனி பெயரில் போலி டீ தூள், பீடி, பெருங்காயம், பல்பொடி, மிளகுதூள், புகையிலை போன்றவை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து போலீசார் அங்கிருந்த சவுந்தரபாண்டியை(வயது 40) பிடித்து விசாரித்தனர். அதில் அவர் தான் வெளி இடங்களில் அந்த பொருட்களை விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, அங்கிருந்த 60 கிலோ போலி டீ தூள், 100 பண்டல் பீடிகள், பெருங்காயம், 300 கிலோ புகையிலை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்