நாகமலைபுதுக்கோட்டை
நாகமலைபுதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஆலம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் ஆலம்பட்டி கல்விநகரைச் சேர்ந்த தங்கமணி மனைவி ஜெயா(வயது 53) என்பதும், அவர் பையில் கஞ்சா வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.20 ஆயிரத்து 100-ஐ பறிமுதல் செய்தனர்.