மேலூர்
மேலூர் அருகில் உள்ள நரசிங்கம்பட்டியை சேர்ந்தவர் வீரணன் (வயது 74). இவர் இருசக்கர வாகனத்தில் மேலூரில் இருந்து நான்கு வழி சாலையை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார், இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மேலூர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.