பெங்களூரு மத்திய மண்டலத்தில் திருட்டு வழக்கில் 56 பேர் கைது

பெங்களூரு மத்திய மண்டலத்தில் திருட்டில் ஈடுபட்ட 56 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ கோடி பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளது.

Update: 2021-07-15 20:50 GMT
பெங்களூரு:

ேபாலீஸ் ஐ.ஜி. பார்வையிட்டார்

  பெங்களூரு மத்திய மண்டல போலீசார் நகரில் வாகன திருட்டு மற்றும் வீடுகளில் புகுந்து திருடிய கும்பலை கைது செய்து இருந்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் பல்வேறு பகுதிகளில் திருடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், கார்கள், தங்கநகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஆனேக்கல்லில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்திரசேகர், பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வம்சி கிருஷ்ணா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகாதேவா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் ஐ.ஜி. சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

56 பேர் கைது

  பெங்களூரு மத்திய மண்டலத்தில் உள்ள ஹெப்பகோடி, ஜிகனி, அத்திபெலே, பன்னரகட்டா, சர்ஜாபுரா, ஆனேக்கல் ஆகிய போலீஸ் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வாகனங்களை கள்ளச்சாவியை பயன்படுத்தி திருடியதாகவும், வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்டதாகவும் 56 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

  அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் ரூ.1.74 கோடி மதிப்பிலான இருசக்கர வாகனங்கள், கார்கள், தங்கநகைகள், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் கைதாகி இருப்பதன் மூலம் ஹெப்பகோடி, ஜிகினி, அத்திப்பள்ளி, பன்னரகட்டா, சர்ஜாபுரா, ஆனேக்கல் ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது. வாகன திருட்டில் ஈடுபட்ட கும்பலை கைது செய்த போலீசாருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். வாகன திருட்டை தடுக்க உரிமையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்