மது, கஞ்சா விற்ற 2 பேர் கைது

சிவகாசியில் மது, கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-15 20:40 GMT
சிவகாசி, 
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் கருவாட்டுபேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்குள்ள டாஸ்மாக்கடையின் அருகில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மங்களம் கம்மாபட்டியை சேர்ந்த முருகன் (வயது 55) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 9 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சிராஜூதீன் சாட்சியாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு ஐயப்பன்காலனியை சேர்ந்த அஜித்குமார் (23) என்பவர் விற்பனைக்காக கஞ்சாவுடன் நின்று இருந்தார். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.350-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்