தொழிலாளி பலி
பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சாத்தூர்,
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து நடந்தது. அப்போது அங்கு பணியாற்றி கொண்டு இருந்த சுந்தரகுடும்பன் பட்டியை சேர்ந்த முகேஷ் கண்ணன் (வயது 25) என்பவர் தீக்காயம் அடைந்தார். அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் ஆலை உரிமையாளர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் மேற்பார்வையாளர் பழனிச்செல்வம் (52), கணக்கர் பாலசுப்பிரமணியம் (47) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.