புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேர் கைது

சின்னாளப்பட்டி அருகே புகையிலை பொருட்கள் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-07-15 16:52 GMT
திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே உள்ள பஞ்சம்பட்டி மற்றும் ஆலமரத்துப்பட்டி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சின்னாளப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத்தொடர்ந்து சின்னாளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்- இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி மற்றும் போலீசார் ஆலமரத்துப்பட்டி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் 4 மூட்டைகளுடன் சந்தேகப்படும்படி வந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தனர். 

அப்போது அந்த மூட்டைகளில் 1500 பாக்கெட்டுகளில் புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 


விசாரணையில் அவர்கள், பஞ்சம்பட்டியை சேர்ந்த மோகன் (வயது 37), ஆறுமுகம் (40) என்றும், புகையிலைப்பொருட்களை பஞ்சம்பட்டி மற்றும் ஆலமரத்துப்பட்டி பகுதிகளில் வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்