தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 3 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
தூத்துக்குடி:
முறப்பநாடு அருகே உள்ள கீழபுத்தனேரியை சேர்ந்த மூக்கையா என்ற சண்முகநாதன் மகன் முருகபெருமாள் (வயது 30), மாரியப்பன் மகன் பாலமுருகன் (21) ஆகியோர் ஒரு கொலை வழக்கில் முறப்பநாடு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதே போன்று நெல்ல மாவட்டம் கட்டாம்புளியை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெரீன் (23) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், முருகபெருமாள், பாலமுருகன், ஜெரீன் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.