பெரியகுளம் அருகே ரேஷன்கடையில் தரமற்ற அரிசி வினியோகம் பொதுமக்கள் சாலைமறியல்
பெரியகுளம் அருகே ரேஷன்கடையில் தரமற்ற அரிசி வினியோகம் செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியல் செய்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் அடுத்த கைலாசப்பட்டி கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த ரேஷன்கடையில் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அங்குள்ள தேனி-பெரியகுளம் நெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தென்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தரமான அரிசி வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினர்.
இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.