சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை ஒழிக்கப்படவில்லை ஐகோர்ட்டு வேதனை

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் வறுமை ஒழிக்கப்படவில்லை ஐகோர்ட்டு வேதனை.

Update: 2021-07-15 14:51 GMT
சென்னை,

தமிழக பொதுப்பணித்துறை மேற்கொள்ளும் சாலைப் பணிகள், நடைபாதை பணிகள், அரசு அலுவலகங்கள் கட்டுமானப் பணிகளின் தரத்தைப் பரிசோதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஸ்ரீகிருஷ்ணா பகவத் என்பவர் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், அரசு அமைக்கும் சாலைகள் 6 மாதங்கள்கூட நீடிப்பதில்லை. இதை அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை என்று கூறினார்.

இதையடுத்து மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், ‘சாலைகள், கட்டிடங்கள் கட்டுவது தொடர்பாக விதிகள் உள்ளன. அவற்றை அமல்படுத்த வேண்டும். சாலைகள் அமைப்பது தொடர்பாக ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவோ, ஆய்வு செய்யவோ முடியாது. பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் பொறுப்பாக்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் மேலாகியும் இன்னும் வறுமை ஒழிக்கப்படவில்லை. அடிப்படைக் கல்வி முழுமையாக வழங்கப்படவில்லை’ என்று வேதனையுடன் கருத்து கூறினர்.

மேலும் செய்திகள்