திருச்சி மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-07-15 01:41 GMT


திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பரவலாக மழை

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவதி அடைந்தனர். 
இந்தநிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் பல இடங்களில்  காலை முதல் மதியம் வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

பின்னர் மாலையில் பரவலாக மழை பெய்தது. திருச்சியில் மாலை தொடங்கிய சாரல் மழை இரவிலும் நீடித்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் திருச்சி மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

இதுபோல் தா.பேட்டை, தும்பலம், மேட்டுப்பாளையம், துறையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று துறையூர், தா.பேட்டை பகுதியில் வானில் கருமேகங்கள் சூழ்ந்தது. 

பின்னர் இடி, மின்னலுடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீரென பெய்த இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதமான காற்று வீசியதால் குளிர்ச்சி நிலவியது.

மேலும் செய்திகள்