வக்கீல் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சியில் வக்கீல் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி,
திருச்சியில் வக்கீல் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வக்கீல் வெட்டிக்கொலை
திருச்சி பீமநகர் வடக்கு எடத்தெருவை சேர்ந்தவர் வக்கீல் கோபிகண்ணன் (வயது 33). இவர் கடந்த மே மாதம் 9-ந் தேதி மாலை 5 போ் கொண்ட கும்பலால் ஹீபர் ரோட்டில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை தொடர்பாக பாலக்கரை கீழப்புதூரை சேர்ந்த பிரஜேஷ் பிரசாந்த் மற்றும் அவருடைய நண்பர்கள் கோவை காளப்பட்டி ரோடு பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ் (47), திருச்சியை சேர்ந்த நல்லதம்பி, அர்ஜீனன், உதயகுமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, திருச்சி இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
5 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறார்களை தவிர, மீதம் உள்ள 5 குற்றவாளிகளும் கொடுங்குற்றம் செய்யக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வந்தது. இதனால், அவர்களை ஓராண்டு ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரஜேஷ் பிரசாந்த், சுரேஷ், நல்லதம்பி, அர்ஜீனன் மற்றும் உதயகுமார் ஆகிய 5 பேருக்கும், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்வதற்காக ஆணை வழங்கப்பட்டது.