தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பலி

அம்பை அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-14 21:51 GMT
அம்பை:
கடையநல்லூரை சேர்ந்தவர் ரகுமத்துல்லா மகன் ஜாகீர் உசேன் (வயது 35). இவர் தனது நண்பர்கள் சிலருடன் 3 மோட்டார் சைக்கிள்களில் அம்பை அருகே உள்ள சின்ன சங்கரன்கோவிலுக்கு நேற்று வந்தார். அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் அனைவரும் குளித்தனர்.

அப்போது, ஜாகீர் உசேன் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரில் இறங்கி, ஜாகீர் உசேன் உடலை மீட்டனர். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்