விபத்தில் போலீஸ்காரர் படுகாயம்
சிவகிரி அருகே நடந்த விபத்தில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.
பனவடலிசத்திரம்:
தென்காசி மாவட்டம் நகரம் ஊரைச் சேர்ந்தவர் சந்தனபாண்டி மகன் மாரிச்சாமி. இவர் சிவகிரி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் பாதுகாப்பு பணிக்காக நேற்று சிவகிரியில் இருந்து நெல்லைக்கு ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குருக்கள்பட்டிைய அடுத்த மேலநீலிதநல்லூரில் உள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, நெல்லையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த மாரிச்சாமி சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து பனவடலிசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.