குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
தளவாய்புரம் அருேக குழாய் உடைந்து குடிநீர் வீணாக செல்கிறது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் கிராமத்துக்கு தேவி ஆறு பகுதியிலிருந்து தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் பஞ்சாயத்து சார்பில் கிணறு அமைத்து மின் மோட்டார் மூலம் குடிநீர் பம்பிங் செய்யப்படுகிறது. இந்த நிலையில் இங்கு கடந்த சில நாட்களாக பம்பிங் செய்யப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் குறைந்த அளவே கிடைக்கிறது. ஆகவே இதனை மேலூர் துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து நிர்வாகம் கவனத்தில் கொண்டு விரைவில் தேவி ஆறு பகுதியிலுள்ள பழுதான குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.