அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது

அரசு பஸ் டிரைவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-07-14 19:01 GMT
மதுரை
மதுரை திருப்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 49), அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் செல்லூர் ரோட்டில் பஸ்சை ஓட்டி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தண்ணீர் லாரி பஸ் மீது இடித்தது. இதுகுறித்து ஜெயக்குமார், லாரி டிரைவரிடம் கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது லாரி டிரைவர் தாகாத வார்த்தைகளால் ஜெயக்குமாரை திட்டி, இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான பரவையை சேர்ந்த சுல்தான்சிக்கந்தர்(34) என்பவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்