மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் பிணத்துடன் உல்லாசம் கைதான ஓட்டல் தொழிலாளி குறித்து பகீர் தகவல்

மனைவி இறந்ததுகூட தெரியாமல் குடிபோதையில் ஓட்டல் தொழிலாளி பிணத்துடன் உல்லாசம் அனுபவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Update: 2021-07-14 18:04 GMT
பொள்ளாச்சி

 தேனி மாவட்டத்தை சேர்ந்த பாண்டியராஜன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையத்தில் ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த திருமணமான கலாமணி என்ற பெண் ஓட்டலுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசின்கொண்டனர்.

கோவிலில் வைத்து திருமணம்

இந்த நிலையில், பாண்டியராஜன் வேலைபார்த்து வந்த ஓட்டல் திடீரென மூடப்பட்டது. இதையடுத்து, தான் வேலைக்காக கோவைக்கு செல்வதாக பாண்டியராஜன் கலாமணியிடம் கூறி உள்ளார். அவரும் வருவதாக சொன்னதால், இருவரும் கோவை அருகே உள்ள தொண்டாமுத்தூர் பகுதிக்கு வந்தனர்.

 பின்னர் 2 பேரும் அங்கு உள்ள ஒருகோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டு அப்பகுதியில் வாடகைக்கு வீடுஎடுத்து தங்கினார்கள். பாண்டியராஜன் அங்குள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார்.

மது அருந்தினார்கள்

 கடந்த 10-ந் தேதி மாலை இருவரும் ஓட்டல் உரிமையாளரை சந்திக்க சென்றனர். அவரிடம் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பும்போது, மதுபாட்டில்களை வாங்கி வந்தனர். வீட்டிற்கு வந்ததும் 2 பேரும் சேர்ந்து மது அருந்தினார்கள்.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து மனைவியை திட்டிவிட்டு பாண்டியராஜன் சாப்பாடு வாங்க வெளியே சென்றார். பின்னர் அவர் சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தார். பின்னர் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு சாப்பிட்டனர்.

கட்டையால் தாக்கினார்

அப்போது மீண்டும், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாண்டியராஜன், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மனைவியை தாக்கினார். இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார்.

 அவருடைய அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருக்க துணியை எடுத்து அவருடைய முகத்தில் அமுக்கி உள்ளார். இதனால் கலாமணி மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிணத்துடன் உடலுறவு

தனது மனைவி உயிரிழந்தது கூட தெரியாமல் குடிபோதையில் இருந்த பாண்டியராஜன், கலாமணியின் ஆடையை களைந்து உல்லாசமாக இருந்துவிட்டு அப்படியே தூங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது கலாமணி பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.

 இதனால் பதறிபோன பாண்டியராஜன், இங்கு இருந்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர் சொந்த ஊருக்கு தப்பிச்செல்ல முடிவு செய்தார். பின்னர் எதுவும் நடக்காததுபோன்று கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு ஆட்டோ பிடித்து கோவை உக்கடத்துக்கு சென்றார்.

மொட்டை போட்டார்

 பின்னர் அங்கிருந்து தேனிக்கு பஸ் ஏறிய அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இறங்கினார். பிறகு அவர் முருகன் கோவிலுக்கு சென்று போலீசார் தன்னை அடையாளம் காணாமல் இருக்க மொட்டை போட்டுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு சென்று உலா வந்தார்.

 சொந்த ஊரில் இருந்தால் போலீசார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று நினைத்து, உசிலம்பட்டில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தார். அப்போது அவர் போலீசில் சிக்கியதாக வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்