மினி லாரி மோதி கார் டிரைவர் பலி
திருக்கோவிலூர் அருகே மினி லாரி மோதி கார் டிரைவர் பலி
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் அருகே உள்ள மடவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் மகன் சதீஷ்(வயது 31). கார் டிரைவரான இவர் நேற்று மாலை திருக்கோவிலூர்- விழுப்புரம் சாலையில் வீ.சித்தாமூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி வந்த மினி லாரி சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து அரகண்டநல்லூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.