உத்தனப்பள்ளி அருகே யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்

உத்தனப்பள்ளி அருகே யானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2021-07-14 17:15 GMT
ராயக்கோட்டை:
ஓசூர் பேரண்டபள்ளி வனப்பகுதியில் நீண்ட நாட்களாக காட்டு யானை ஒன்று பதுங்கி உள்ளது. இந்த யானை நேற்று சூளகிரி-உத்தனப்பள்ளி சாலையில் உள்ள அஞ்சலகிரி கிராமத்திற்குள் புகுந்தது. அங்குள்ள விளை நிலங்களில் ஆக்ரோஷமாக சுற்றி திரிந்த அந்த யானையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். அவர்கள் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் இந்த யானை கஞ்சூர் கிராமத்திற்குள் புகுந்து அங்கு விவசாய நிலங்களில் இருந்த தண்ணீர் குழாய்கள், மின்சாதனங்களை சேதப்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்